Categories
தேசிய செய்திகள்

துபாயிலிருந்து தங்கம் கடத்தல்…. தொடர் விசாரணையில் 5 1/2 கிலோ தங்கம் பறிமுதல்…!!!

துபாயில் இருந்து கேரளா வந்த விமானத்தில் ஐந்தரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் கேரளாவுக்கு விமானம் மூலம் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் நேற்று துபாயில் இருந்து கொச்சி வந்த சர்வதேச விமானம் ஒன்றில் இருந்து வந்த பயணிகள் அனைவரிடமும் தீவிர சோதனை நடத்தினர். இதில் முன்னுக்குப் பின் முரணாக பேசிய நான்கு நபர்களை போலீசார் அழைத்து அவர்களிடம் சோதனை நடத்தினர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ரகசியமாக தங்கம் கடத்தியது தெரியவந்தது.

மேலும் அதில் ஒருவரிடமிருந்து சுமார் 375 கிராம் தங்கம் மற்றும் இன்னொருவரிடம் இருந்து ஆயிரத்து 500 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில் ஒரு பெண் 3,750 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து பிடிபட்ட பெண் உட்பட 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுமார் 575 கிராம் தங்கம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மொத்த எடையும் செய்து ஐந்தரை கிலோ வரை இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |