Categories
சினிமா தமிழ் சினிமா

‘சர்வைவர்’ நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் தெரியுமா?… இணையத்தில் கசிந்த தகவல்…!!!

அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் என்ற நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். சர்வைவர் நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இதில் 2 பேர் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் கலந்து கொண்டனர். காடுகளில் கிடைக்கும் பொருட்களை வைத்து போட்டியாளர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதுதான் சர்வைவர் நிகழ்ச்சியின் மையக்கரு.

நொந்து நூடுல்ஸ் ஆன விஜயலட்சுமி.. காட்டிருக்கும் மனைவியால் வீட்டிலிருக்கும்  கணவரின் குமுறல்! - Cinemapettai

காட்டில் 90 நாட்கள் வசித்து கொடுக்கப்படும், கடுமையான டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் போட்டியாளருக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சர்வைவர் நிகழ்ச்சியின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜயலட்சுமி இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் என இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.

 

Categories

Tech |