இளையராஜாவின் பிரபல பாடலின் இசை பெங்காலியின் பக்தி பாடலாக மாறியுள்ளது.
இசைஞானி இளையராஜா 1976 இல் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு ‘பத்மபூஷன்’ விருது 2010-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
இவரின் பாடல்களை கேட்பதற்கென்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில், மணிரத்னம் இயக்கிய ‘நாயகன்’ திரைப்படத்தில் ‘நிலா அது வானத்து மேலே’ என்ற பாடலை இவர் இசையமைத்திருந்தார். இந்நிலையில், இந்த பாடலின் இசையை வைத்து பெங்காலி மொழியில் நவராத்திரி சிறப்பாக பக்தி பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. உஷா உதுப் பாடியுள்ள இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.