தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார் ஜீவா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜீவா. இவர் ”ஆசை ஆசையாய்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை அவரது தந்தை ஆர்.பி சவுத்ரி தயாரித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இவர் நடிப்பில் வெளியான ராம், சிவா மனசுல சக்தி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
இந்நிலையில், இவர் தனது மகனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.