Categories
தேசிய செய்திகள்

ச்ச்ச… இப்படி ஒரு தந்தையா….? பெற்ற மகளையே பலாத்காரம் செய்து நண்பர்களுக்கும் விருந்தாக்கிய காமுகன்…!!!

ஒரு தந்தை தான் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்து சில அரசியல் பிரமுகர்களுக்கும் விருந்தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை அவருடைய தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. லாரி டிரைவரான இந்த சிறுமியின் தந்தை இவர் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது டிவியில் ஆபாச படங்களை போட்டு காட்டி சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்து அந்த சிறுமியை வெளியே அழைத்து சென்று புது ஆடைகள், சாப்பாடு, தின்பண்டங்கள் என அனைத்தும் வாங்கி கொடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் இதை வெளியே சொன்னால் அந்த சிறுமியின் தாயாரை கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்னர் சிறுமியை அடிக்கடி வெளியே அழைத்து சென்று ஹோட்டலில் அறை எடுத்து தங்க வைத்து உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அதை சாப்பிட்டதும் அரை மயக்கத்தில் இருக்கும் அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளார். மேலும் அவருடைய நண்பர்களான சில அரசியல் பிரமுகர்களுக்கும் இந்த சிறுமியை விருந்தாக்கி உள்ளார் அந்த காமுக தந்தை.

இதனால் சிறுமி சில நாட்களாக வயிற்றுவலியால் அவதியுற்று வந்துள்ளார். மேலும் மாணவி கொடுத்த புகாரின் பேரில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் தியாகி யாதவ் மற்றும் அவருடைய மூன்று தம்பிகள். நகர தலைவர் ராஜேஷ் ஜெயின் ஜோசி , பகுஜன் சமாஜ் மாவட்ட தலைவர் தீபக் மற்றொரு தலைவர் நீராஜ் திவாரி உட்பட 28 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் செக்சன் 354 தாக்குதல், செக்சன் 376 டி கற்பழிப்பு, 323 தானாக முன்வந்து காயப்படுத்துதல், செக்சன் 328 ,506 குற்றவியல் விரட்டல் மற்றும் 120d பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தையை பாதுகாக்கும் போக்சோ சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |