தண்ணீரில் எரிபொருள் மாசுபட்டதால் பொதுமக்கள் அதை குடிக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கனடா நுணாவுட் பிரதேசம் Iqaluit-ல் சுமார் 7 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் Iqaluit நகரில் விநியோகம் செய்யப்படும் தண்ணீரில் எரிபொருள் மாசு கலந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அதை குடிக்கவோ, சமையலுக்கோ பயன்படுத்த வேண்டாம் என்று உத்தரவிடபப்ட்டுள்ளது. இதுகுறித்து நகர அதிகாரிகள் கூறியதாவது “வார இறுதியில் தண்ணீரில் எரிபொருள் வாசனை வருவதாக அந்த குடியிருப்பாளர்கள் புகார் கொடுத்தனர்.
ஆகவே தண்ணீரை கொதிக்க வைத்து குடித்தாலும் அது பாதுகாப்பானது இல்லை” என்று நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நகரின் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஹைட்ரோகார்பன் மாசுபாடு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவு வர இன்னும் 5 நாட்கள் ஆகும் என்றும் தகவல்கள் வெளிவந்தது. இதனால் தற்போது Iqaluit நகர குடியிருப்பாளர்களுக்கு லாரியின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு லாரியில் இருந்து வரும் தண்ணீரை பொதுமக்கள் குறைந்தபட்சம் 1 நிமிடமாவது கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.