Categories
தேசிய செய்திகள்

இனி ரயில் டிக்கெட் மட்டுமல்ல பஸ் டிக்கெட்டும் புக் பண்ணலாம்…. ஐஆர்சிடிசி அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ரயில் பயண டிக்கெட் மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் வடமாநில சுற்றுலா பேக்கேஜ் போன்ற சேவைகளை ஐஆர்சிடிசி வழங்கி வருகிறது. இந்நிலையில் பணிகளுக்கு மற்றொரு வசதியும் வழங்கப்பட உள்ளது என்று இந்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் மற்றும் விமான பயண டிக்கெட்டுகள் மட்டுமின்றி இனி பேருந்து பயண டிக்கெட்களையும் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து பல மாதங்களாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்து நிலையில்  இந்த புக்கிங் வசதி நடைமுறை வெற்றி பெற்றதால் தற்போது பயனர்கள் பேருந்து பயணம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய நாடு முழுவதும் 22 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பயணிகள் தங்கள் பேருந்து பயண டிக்கெட்களை http://www.bus.irctc.co.in என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் டிக்கெட் தொகை தவிர வேறு எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

மேலும் ஐஆர்சிடிசி உடன் பயனாளிகள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்தால் மாதத்திற்கு 12 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி உள்ளது. நாடு முழுவதும் 50 ஆயிரம் பேருந்துகள் இயக்கம் நிறுவனங்களுடன் இணைந்து ஐஆர்சிடிசி நிறுவனம் பணியாற்றி வருகிறது என்று இந்திய ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது

Categories

Tech |