நாட்டில் கொரோனாவில் காரணமாக வாகன ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் ஆகியவற்றை புதுப்பிக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் வரும் 31 ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்க படாது என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட சான்றிதழ்களை புதுபிக்க ஏழு முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி வருகிற 31-ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும்.
இந்நிலையில் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், வாகன ஆவணங்களை புதுப்பிக்க வருகின்ற 31ம் தேதிக்கு பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதனால் புதுப்பிக்கக் கோரி நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்கள் மீதும் இந்த மாதம் இறுதிக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்கள் நேரடியாக வருவதை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிப்பது மற்றும் பரிசீலிப்பதை மேற்கொள்ள வேண்டும். தேவைப்படும் பகுதிகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.