Categories
அரசியல்

வாங்குற கூலிக்கு வேலை பார்க்க…. சீமானை மிஞ்ச யாருமில்லை… இதெல்லாம் பச்சை துரோகம் …!!

சீமான் வாங்குற கூலிக்கு சரியாக வேலை செய்கிறார் என காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை,  நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் காங்கிரஸ் பேரியக்கத்தையும், தலைவர்களையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி பேசுவதும், கிண்டலடிப்பதும் வாடிக்கையாக வைத்துள்ளார். அவருக்கு இதில் என்ன மகிழ்ச்சி என்று தெரியவில்லை. வாங்குகின்ற கூலிக்கு சரியாக வேலை பார்க்கணும் என்பதால் சீமானை விட சிறப்பாக யாரும் வேலை பார்க்க முடியாது.

அங்கே விவசாயிகளை படுகொலை செய்கிறார்கள். ஒரு மத்திய உள்துறை இணை அமைச்சரினுடைய மகன் காரை ஏற்றி சாகடிக்குறான். வாயை திறக்க மாட்டேங்குறார் சீமான். அவர்களுக்காகப் பரிந்து பேச மாட்டேங்குறாரு. காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டம் செய்து கொண்டிருகிறது. காங்கிரசை கொச்சைபடுத்துகிறார். இந்த உலகத்தில் மிகப்பெரிய துரோகம் எது என்றால் மகா துரோகம், பச்சை துரோகம் திருப்பெருந்தூரில் நடந்தது.

அதை அடிக்கடி அவர்கள் சொல்வார். ஸ்ரீபெரும்புதூரில் என்ன நடந்தது தெரியுமா, என்ன நடந்தது அங்கே துரோகம் நடந்திருக்கிறது, பச்சை துரோகம் நடந்திருக்கிறது, மகா துரோகம் நடந்திருக்கிறது, நம்பிக்கை துரோகம் நடந்திருக்கிறது. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்ற பெயர் இருந்தது. 1991க்கு பிறகு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கெல்லாம் பரிந்து பேசுகின்ற கூட்டம் தான் சீமானுடைய கூட்டம் என விமர்சித்தார்.

Categories

Tech |