Categories
தேசிய செய்திகள்

மண்சரிவில் சிக்கிய நாய்….காப்பாற்றிய இளைஞர்…. மனிதநேயத்தின் உச்சம்…

கேரளாவில் மண்சரிவில் தன் குட்டிகளுடன் சிக்கிக்கொண்ட நாயை ஒருவர் மீட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர்அஷ்ரப். இவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பின்புறம் நாயொன்று ஆறு குட்டிகளுடன் வாழ்ந்து வந்துள்ளது. ஆனால் சில நாட்களாக அப்பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த நாய் தனது குட்டிகளுடன் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டது. இதனால் செய்வதறியாது திகைத்த நாய் மூச்சு விடாமல் குறைத்துள்ளது. நாய் குறைக்கும் சத்தம் கேட்டு அங்கு வந்த அசரப் நாயை தேடி பார்த்துள்ளார் .

அப்போது அது மண்ணுக்குள் புதைந்து தலை மட்டும் வெளியே தெரியுமாறு இருந்துள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினரை அழைத்து அவர்களின் உதவியுடன் மண்ணை அகற்றி விட்டு அந்த நாயை மற்றும் இரண்டு குட்டிகளையும் பத்திரமாக காப்பாற்றியுள்ளார். மற்ற நான்கு குட்டிகளும் மண்ணில் புதைந்து உயிரிழந்து விட்டன.

Categories

Tech |