Categories
சினிமா தமிழ் சினிமா

”தர்மதுரை2” படத்தின் அப்டேட்…. ட்விட்டரில் ஆர்.கே.சுரேஷ் வெளியிட்ட பதிவு….!!

தர்மதுரை2  பற்றிய அப்டேட் விரைவில் வெளியாகும் என ஆர்.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சீனு ராமசாமி இயக்கத்தில் இவர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ”தர்மதுரை”. இந்த படத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஆர். கே.சுரேஷ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்தார்.

தர்மதுரை 2 படத்தின் அப்டேட்... விரைவில் வெளியாகும் என அறிவிப்பு! | Dharmadurai  2 movie update will be released soon - Tamil Filmibeatஇந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் ‘தர்மதுரை 2 அப்டேட் விரைவில்’ என்று பதிவிட்டுள்ளார். மேலும், நடிகர் மற்றும் நடிகை பற்றிய தகவல் எதுவும் குறிப்பிடவில்லை.

Categories

Tech |