பிரான்ஸ் எல்லையில் பிரித்தானிய பாஸ்போர்ட்டை முத்திரையிடுவது குறித்த விதிகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
பிரான்சுக்கு பயணம் செய்யும் பிரித்தானியர்கள், எல்லை தாண்டும்போது தங்கள் பாஸ்போர்ட்டை முத்திரையிடுவது குறித்து குழப்பங்கள் நீடித்து வருகிறது. இது குறித்து விரிவன விபரங்கள் பின்வருமாறு: பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதால், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இடையே எல்லையை கடப்பது இன்னமும் சிக்கலாகவே காணப்படுகிறது. இதனால் பலர் தங்களது பாஸ்போர்ட்களை எல்லையில் முத்திரையிட வேண்டியுள்ளது.
பிரான்சுக்கு சுற்றுலா அல்லது குறுகிய கால பயணம் மேற்கொள்ளும் பிரித்தானியர்கள், பிரான்ஸ் நாட்டுக்குள் நுழையும்போதும், வெளியேறும் போதும் தங்கள் பாஸ்போர்ட்களை எல்லையில் முத்திரையிடுவது வழக்கமான நடைமுறை. இதன் மூலம் அவர்கள் எத்தனை நாட்கள் பிரான்சில் தங்குகிறார்கள் என்பதை கண்காணிக்க போலீசாருக்கு உதவியாக அமைகிறது.
ஆனால், பிரெஞ்சு குடியுரிமை கொண்ட பிரித்தானியர்கள், பிரான்சுக்குள் நுழையும்போது எல்லையில் உள்ள அதிகாரிகளிடம், பாஸ்போர்ட்டுடன் தங்கள் குடியிருப்பு அனுமதி அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த குடியிருப்பு அனுமதி அட்டை இல்லாத பட்சத்தில் அவர்கள் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31-க்கு முன் பிரான்சுக்கு குடிபெயர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதன் மூலம் குடியிருப்பு அனுமதி அட்டை கோரி விண்ணப்பித்த ரசீதை காட்டி கொள்ளலாம்.
மேலும் 2020 டிசம்பர் 31 க்கு பின் பிரான்சுக்கு குடிபெயர்ந்தவர்கள் விசா வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, பிரான்ஸ் விதிகளின்படி, 2021 ஜனவரி 1ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இதனை தொடர்ந்து பிரெஞ்சு வாழிட உரிமம் கொண்ட பிரித்தானிய மக்களுக்கு எல்லையில் பாஸ்போர்ட் முத்திரையிடப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.