நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ்காந்தியின் பிள்ளைகள் போல் காங்கிரஸ்காரர்கள் அனைவரும் பேசுகின்றார்கள் என்று அண்மையில் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது கட்சியின் உறுப்பினர் சாட்டை துரைமுருகன், “கருணாநிதி அண்ணாதுரையிடம்தான் நீங்கள் படித்து வளர்ந்துள்ளீர்கள். ஆனால் நாங்கள் தலைவர் பிரபாகரனிடம் படித்து வளர்ந்த பிள்ளைகள். பெரியார் மற்றும் கருணாநிதியின் பிள்ளைகளுக்கு எழுதவும் பேசவும் தெரியும்.
ஆனால் பிரபாகரனின் பிள்ளைகளுக்கு என்ன தெரியும் என்பது அவர்களுக்குத் தெரியும். ராகுல் காந்திக்கு தெரியும்.. சோனியா காந்திக்கு தெரியும்.. உங்களுக்கு தெரியும்.. உங்களுக்கு தெரியுமில்ல.. ஸ்ரீபெரும்புதூர் ஞாபகம் இருக்கிறதா… அவ்வளவுதான்.. என்று எச்சரிக்கையாக பேசியுள்ளார். இதனால் கடந்த 11ஆம் தேதி காங்கிரஸினரின் புகாரின் அடிப்படையில் சாட்டை முருகன் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து டிஜிபியிடம் காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை மற்றும் ஜோதிமணி ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.
இதன் பின்னர் செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் பேசியதாவது, “சீமானிடம் நான் ஒரு கேள்வி ஒன்றே முன் வைக்கிறேன். நீ யாரை கடிக்கல.. யாரை குதறல விளிம்பு நிலையில் உள்ள சமூகத்திலிருந்து வந்த ரஞ்சித்தை கடித்து குதறுனா. பல்வேறு தரப்பில் இருந்து வருபவர்களை கடிச்ச. கட்சியில் உன்னைத் தவிர வேறு எவரும் இந்த நாட்டின் இருக்கக் கூடாதா? நீ என்ன ஹிட்லரா? முசோலினியா? மைக்கின் முன் நின்று கத்தி கத்தி ஜுரம் வந்து படுத்திருக்கிறார்கள். இதுதான் தற்போதைய தமிழகத்தின் நிலையாகும்.
காங்கிரஸ் பேரியக்கத்தை ஏற்றுக்கொண்ட தலைவி இந்திரா காந்தியின் குடும்பத்தை பற்றி அவதூறாக நக்கலடித்து பேசினால் நாங்கள் நேராக உங்கள் வீட்டிற்கு வந்து நிற்போம். இதுதான் உனக்கு முதலும் கடைசியுமான எச்சரிக்கையாகும். பேசுவதற்கு ஒரு வரமுறை உள்ளது. அரசியலில் நீ என்னதான் பண்ணுகிறாய்? நாங்கள் ஆர் எஸ் எஸ் ஐ கூட கடுமையாக எதிர்ப்போம். ஆனால் அவர்களை ஒருபோதும் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தி பேசியது இல்லை. எங்களது கருத்துக்களை நாங்கள் மிகவும் நாகரீகமாக மக்கள் ஏற்கும் விதமாக வெளிப்படுத்துவோம்”என்று கூறியுள்ளார்.