Categories
உலக செய்திகள்

அதிபர் மறைமுகமா எச்சரிக்கை விடுக்கிறாரா..? ராணுவ பலத்தை காண்பிக்கும் வடகொரியா… வெளியான புகைப்பட காட்சிகள்..!!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு ராணுவ வீரர்களின் சாகசத்தை கண்டு வியந்த புகைப்பட காட்சிகள் வெளியாகியுள்ளது.

வடகொரியாவில் சமீபத்தில் பாதுகாப்பு மேம்பாட்டு கண்காட்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் அதிபர் கிம் ஜாங் உன்னிடம் வடகொரிய ராணுவ வீரர்கள் தாங்கள் எந்த அளவிற்கு பலமானவர்கள் என்பதை செய்து காட்டியுள்ளனர். அந்த வகையில் பலர் சேர்ந்து ஒருவரை மரப்பலகைகளை கொண்டு அடிப்பதும், அதனை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதும், இரும்பு ராடுகள் மற்றும் செங்கற்கள் ஆகியவற்றை தங்களது பலத்தை கொண்டு அடித்து நொறுக்குவது போன்றும் ராணுவ வீரர்கள் செய்து காட்டியுள்ளனர்.

அந்த நிகழ்ச்சியை கண்டு வியந்து போன அதிபர் கிம் ஜாங் உன் ஒரு விதமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் வடகொரியாவில் உள்ள அரசு தொலைக்காட்சியில் இந்த கண்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அந்த ஒளிபரப்பின் போது வடகொரியாவின் அமைதியை நிலைநாட்ட இரும்பு முஷ்டிகல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே வடகொரியாவின் ராணுவ வீரர்கள் எந்த அளவிற்கு பலமாக உள்ளனர் என்பதை காண்பித்து அதிபர் கிம் ஜாங் உன் உலகிற்கு மறைமுக எச்சரிக்கை விடுப்பதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |