ஆட்சியரின் உத்தரவின்படி உத்தமபாளையத்தை சேர்ந்த 15 திருநங்கைகளுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள் தங்களுக்கும் புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கைகளில் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்திருந்த திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் உத்தமபாளையத்தில் வைத்து 15 திருநங்கைகளுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜுனன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் வட்ட வழங்கல் துணை தாசில்தார் சுருளி மற்றும் அரசு அதிகாரிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.