சீனாவில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனம் புதிய தயாரிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகில் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஸ்மார்ட்போன்களின் பல முன்னணி நிறுவனங்கள் உள்ளன. அவை Samsung, Oppo, Xiaomi, Vivo, Apple, Realme, போன்ற பல நிறுவனங்கள் புதிய மாடல்களை சந்தையில் இறக்குமதி செய்கின்றனர். இந்த நிலையில் உலகின் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் வளர்ந்து வரும் நிறுவனம் தான் One Plus. இதன் புதிய தயாரிப்பு ஒன்று சீனாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து இந்தியாவிலும் விரைவில் சந்தைப்படுத்தப்படும் என்றும் அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த புதிய தயாரிப்பான One Plus 9rt ஸ்மார்ட்போன் ஆனது 6.5 Full Hd Display உடையது. இதனுடைய பேட்டரி அளவானது 4500 mAh உடையது. இது android 11 மற்றும் Qualcomm Snapdragon 888 Processorரை கொண்டது. குறிப்பாக இந்தியாவில் இதன் விலையானது 24,000 ரூபாயாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.