Categories
தேசிய செய்திகள்

சினிமாவையே மிஞ்சிய சேசிங்.. மோட்டார் சைக்கிள் திருடியவர்களை… துரத்திச் சென்று பிடித்த போலீசார்….!!

மோட்டார் சைக்கிள் திருடிய மூன்றுபேரை சினிமா பட பாணியில் போலீசார் ஐந்து கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கனூர் அருகே உள்ள கொ. மணவெளி பகுதியை சேர்ந்தவர் சிவா 51 வயதாகும் இவர் ஒரு பொதுப்பணித்துறை ஊழியர் ஆவார். சிவா நேற்று பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு பின்னர் மோட்டார் சைக்கிளை சிறிது தூரம் தள்ளி நிறுத்தி விட்டு அவருடைய நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது சிவா மோட்டார் சைக்கிள் சாவியை மோட்டார் சைக்கிளிலேயே விட்டுவிட்டு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென அவர்களுடைய பைக்கை நிறுத்தி விட்டு அதில் இருந்து ஒருவர் மட்டும் இறங்கி சிவாவின் பைக்கை ஸ்டார்ட் செய்து எடுத்துவிட்டு வேகமாக கிளம்பியுள்ளனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவா திருடன், திருடன் என்று கூச்சலிட்டு உள்ளார். இதைக் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்து அவர்களை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். இந்த தகவல் திருக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற திருடர்களை ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை வேகமாக துரத்தி சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த மூன்று பேரையும் ராதாபுரம் அருகே போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் விழுப்புரம் விரட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் ,சுந்தர் மற்றும் ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்த முரளி என்பது தெரியவந்தது அவர்களிடம் இருந்து 2 மோட்டார் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Categories

Tech |