Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

செயற்கை வர்ணம் சேர்த்த சில்லி சிக்கன்…. அதிகாரிகளின் திடீர் சோதனை…. திருப்பூரில் பரபரப்பு…!!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட சில்லி சிக்கன், புகையிலை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் முருகம்பாளையம், காங்கேயம் ரோடு, குடிமங்கலம், மடத்துக்குளம் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அதிகாரிகள் 3 கடைகளில் கலப்பட டீத்தூள் கண்டுபிடித்து அதன் மாதிரியை பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 26 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அழித்துவிட்டனர். அதன்பின் செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட சில்லி சிக்கனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்துவிட்டனர்.

Categories

Tech |