சட்ட விரோதமாக கடத்தி வந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயில் இருந்து வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்த நபர்களை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அதிகாரிகள் சென்னை மாவட்டத்தில் வசிக்கும் பிரதீப் மற்றும் அப்துல் ரகுமான் ஆகிய இருவரை பிடித்து சோதனை செய்துள்ளனர்.
இதையடுத்து அதிகாரிகள் அவர்களது சட்டைக்குள் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்திருந்த தங்கத்தை கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகு கடத்தப்பட்ட 12 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அதிகாரிகள் ரகுமான் மற்றும் பிரதீப் குமர் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.