வயதான தம்பதிகளுக்கு உதவி செய்வதுபோல் நடித்து அவர்களிடமிருந்து பணம் நகை மோசடி செய்த 3 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி வினோபாபா நகர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் புது பட்டான் இவருடைய மனைவி ராகினி. இவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் பிரான்சில் வசித்து வரும் நிலையில் இந்த தம்பதி மட்டும் புதுச்சேரியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதி தங்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் உதவிக்காக அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் மற்றும் செல்வம் ,வேலு ஆகியோரை அழைப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
மேலும் புதுபட்டான் இவர்களுடைய ஆட்டோவில் தான் வங்கிக்கு சென்று பணம் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் புதுபட்டான் அணிந்திருந்த 10 பவுன் நகை திடீரென திருடப்பட்டது. மேலும் இவர்கள் ஒரு வீடு விற்பனை செய்ததில் 5 லட்சம் வரை புதுபட்டானுக்கு உதவியாக இருந்த ரமேஷ் கணக்கில் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த புது பட்டான் அவருடைய வங்கி கணக்கை சரிபார்த்த போது அதில் பணம் குறைவாக இருந்துள்ளது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் விசாரித்ததில் ஆட்டோ டிரைவர் ரமேஷ் புதுப்பாட்டானை வங்கிக்கு அழைத்து செல்லும்போது அவருக்கு தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை வங்கியில் இருந்து எடுத்தது தெரிய வந்துள்ளது. மேலும் ரமேஷ் என்பவர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ரமேஷ் ,செல்வம் வேலு ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.