மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களுக்கு நாளை மறுநாள் சசிகலா செல்வதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அவர்களுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், வருகின்ற சனிக்கிழமை காலை 10 மணியில் இருந்து 12:00 மணிக்குள்ளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் திருமதி சசிகலா என்கிற சின்னம்மா அவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தலைவி எம்ஜிஆர் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அதற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கடிதம் எழுதப்பட்டுள்ளது.
Categories
Breaking: சனிக்கிழமை காலை 10 – 12 மணிக்குள்…. பரபரப்பு செய்தி…!!!
