Categories
உலக செய்திகள்

பட்டப்பகலில் நடந்த சம்பவம்… வீடற்ற நபரை துரத்திய 65 வயது மூதாட்டி… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

அமெரிக்காவில் வீடற்ற நபர் ஒருவர் 3 வயது குழந்தையை கடத்த முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை அன்று மதியம் 1.12 மணி அளவில் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள Bronx நகரில் 3 வயது பெண் குழந்தையுடன் 65 வயது பாட்டி சாலையை கடக்க முயற்சித்துள்ளார். இந்த நிலையில் அந்த மூன்று வயது பெண் குழந்தையை அங்கு வந்த வீடற்ற நபர் ஒருவர் கடத்திக்கொண்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த 65 வயது பாட்டி பேரக்குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அந்த வீடற்ற நபரை துரத்தி சென்றுள்ளார். இந்த நிலையில் அவ்வழியாக வந்த நபர் ஒருவர் காரில் இருந்து இறங்கி வந்து குழந்தையை காப்பாற்றியுள்ளார்.

அதன் பிறகு குழந்தையை விட்டுவிட்டு அந்த வீடற்ற நபர் சாதாரணமாக நடந்து சென்றுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் நேற்று முன்தினம் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில் அவர் பெயர் சாண்டியாகோ சால்செடோ (27) என்பது தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் அந்த நபர் மீது கடத்தல் முயற்சி, கடத்தல், குழந்தைக்கு ஆபத்து விளைவித்தல், சட்டவிரோதமாக சிறைபிடித்தல் உள்ளிட்ட குற்றங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நியூயார்க் நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |