Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு பதவி, சம்பளம் உயர்வு…. சூப்பர் அறிவிப்பு… குஷியில் பணியாளர்கள்….!!!!

தமிழகத்தில் மத்திய அரசின் கீழ் ரயில்வே துறை இயங்கி வருகிறது. ரயில்வே துறையில் பணியாளர்களை ஆர்ஆர்பி, ஆர்ஆர்சி மற்றும் என்டிபிசி ஆகிய தேர்வுகள் மூன்று கட்டங்களாக நடைபெற்று தகுதியானவர்களைதேர்வு செய்யப்படுகின்றனர். இதையடுத்து ரயில்வே துறையில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கொரோனா காலகட்டத்தில் அடிப்படை ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜூலை மாதம் முதல் அகவிலை பட்டியலில் 28% ஆக உயர்த்தப்பட்டது. இதனால் மத்திய அரசு தற்போது ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்துள்ளது.

அதை தொடர்ந்து இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி வரும் குறிப்பிட்ட பதவிகளுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ரயில்வே வாரிய செயலர் ஸ்டெனோகிராஃபர் சேவையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு ஆகியவை செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகாரியின் சம்பளம் ரூ.67, 700 இருந்து ரூ.78,880 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர்களுக்கு பதவியும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் அகவிலை பட்டியலில் இருந்து 31% உயர்த்தப்படும் என்று மத்திய அரசு வழங்க திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி படி தொகையை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த பிறகே பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் கொரோனா காலத்தில் அதிகாரிகளின் ஆவணங்கள் வாங்க முடியாததால் ஆவணங்கள் எதுவும் இன்றி கல்வியை பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |