சிறுமி ஒருவர் விமானத்தில் பயணம் செய்யத்தயாராக இருந்தபோது, சிறுமியின் தந்தையே விமானத்தில் பைலட்டாக இருந்ததைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சான்யா மோடிகர் என்ற அந்த சிறுமி டெல்லி செல்வதற்காக தனது தாயுடன் விமானத்தில் ஏறி தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். விமானத்தில் கையில் டிக்கெட்டுடன் இருக்கை மீது ஏறி நின்று ஆச்சரியத்துடன் விமானத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைலட் உடையில் வந்த தனது தந்தையைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் திளைத்தார். தனது தந்தையை அப்பா என்று மழலை மொழியில் அழைத்து மகிழ்ந்த தருணத்தை அச்சிறுமியின் தாயார், அந்நிகழ்வு வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார்.
தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.