தொடர் கனமழை காரணமாக பெங்களூருவில் விமானநிலையத்தை வெள்ளம் சூழ்ந்ததால் பயணிகள் டிராக்டரில் விமான நிலையம் வந்தடைந்தனர்.
பெங்களூரில் கடந்த திங்கட்கிழமை அன்று இரவு பெய்த கனமழையால் விமான நிலையம் நீரால் சூழப்பட்டதால் வெளியே பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து, பல பிரதான சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில், நேற்று பெங்களூர் விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியதால் கார், பைக் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினார். தேங்கிய மழைநீரின் வழியே கார்கள் செல்ல முடியாததால் டிராக்டர் மூலம் லக்கேஜ்களையும் ஏற்றுக்கொண்டு விமான நிலையத்திற்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த கனமழையால் விமான போக்குவரத்து சேவைகளும் சிறிது நேரம் தாமதமானது.