Categories
அரசியல்

தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக மாற்றிய திமுக…. குற்றம்சாட்டும் அதிமுக…!!!

உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”திமுக உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடக்க முடிவு எடுத்திருந்தது.

இத்தேர்தலை  இரண்டு கட்டமாக நடத்தினால் தேர்தல் நியாயமான முறையில் நடக்காது என்று கருதி நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தோம்.  இதில் தேர்தலை  ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் எனவும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி ஆட்சி பணியாளர்கள் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் என்று குறிப்பிட்டிருந்தோம்.

தமிழக தலைமை வழக்கறிஞர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சொன்ன கோரிக்கைகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது என நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது. இதில் இந்த உத்தரவின் பேரில்  தேர்தலை நியாயமாக நடத்துவோம் என்றும் தேர்தல் ஆணையத்திடம் உத்தரவாதம் அளித்து இருந்தது. ஆனால் திமுகவினர் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பது போல தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாகவே இருந்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தை திமுகவானது கைப்பாவையாக மாற்றி இந்த தேர்தலில் மிகவும் வன்முறைகளை களியாட்டங்களை நிகழ்த்தியுள்ளது” என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |