Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கள்ளச்சாவி தயாரிக்க நோட்டமிட்ட நண்பர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

செல்போன் உதிரிபாகங்களை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி டவுன் கேசவன் தெருவில் தீப்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆரணி காந்தி சாலையில் உள்ள பி.ஜி.எம். காம்ப்ளக்ஸில் செல்போன் பழுது பார்க்கும் மற்றும் அதன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றார். கடந்த 8-ஆம் தேதி தீப்சிங் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் தீப்சிங் கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் தீப்சிங் உள்ளே சென்று பார்த்தபோது செல்போன் உதிரிபாகங்கள் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து தீப்சிங் கொடுத்த புகாரின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ்,  சப்-இன்ஸ்பெக்டர் தருமன், துணை போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இதனைத்தொடர்ந்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தீப்சிங்கின் நெருங்கிய நண்பரான ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜலாம் சிங் ரத்தோர் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த கடையின் பூட்டுக்கு கள்ளச்சாவி தயாரிப்பதற்காக நோட்டமிட்டது தெரியவந்தது.

இதற்கு உடந்தையாக ஜலாம் சிங் ரத்தோரின் நண்பர்கள் விக்ரம் சிங் மற்றும் ரகுல் சிங் இருந்துள்ளனர். அதன்பின் 3 பேரையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் திருடிய செல்போன் உதிரிபாகங்களை ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பக்கம் பகுதியில் உள்ள கல்லூரி அருகில் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று செல்போன் உதிரிபாகங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜலாம் சிங் ரத்தோர், விக்ரம் சிங் மற்றும் ரகுல் சிங்கை கைது செய்தனர். அதன்பிறகு அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வாறு திருட்டு நடைபெற்ற 2 நாட்களில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ததால் உயர் போலீஸ் அதிகாரி அவர்களை பாராட்டினார்.

Categories

Tech |