விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு, தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக இவருக்கு ரசிகைகள் அதிகம் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் விஜய் தேவரகொண்டா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.
அந்தவகையில், தற்போது விஜய் தேவரகொண்டா வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் தனது அப்பா, அம்மா மற்றும் தம்பி ஆனந்தை முதன் முறை தனி விமானத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார். விமானத்தில் பயணம் செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CU2fq15BBMV/