வழக்கறிஞ்சர்களை கண்டித்து டெல்லி போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நவம்பர் 2_ஆம் தேதி சனிக்கிழமை டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான போலீசார் தாக்கப்பட்டார்கள். இது தவிர பல போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன. இதை தொடர்ந்து போலீஸ்_க்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று போலீஸ் கமிஷனருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்திருக்கிறார்கள்.அதே போல போலீசார் தங்களை தாக்கியதாகவும் , துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் வழக்கறிஞ்சர்கள் புகார் அளித்திருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கூட பல இடங்களில் போலீசாரை வழக்கறிஞ்சர்கள் தாக்கியதாகவும் சொல்லப்பட்ட நிலையில் போலீசார் பாதுகாப்பு இல்லை என்று போலீசார் டெல்லி போலீஸ் தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
போலீஸ் கமிஷனர் அவர்களிடம் பேசிப் பேசி குறைகளைக் கேட்டும் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. போலீசார் போராட்டத்தை கைவிடப்படவில்லை. இதில் வழக்கறிஞர்கள் பல இடங்களிலும் கண்டபடி போலீசாரை தாக்குகிறார்கள். போலீசாருக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. நாங்கள் எப்படி செயல்பட முடியும் ஆகவே வழக்கறிஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தவிர வழக்கறிஞ்சர் அளித்த புகாரின் அடிப்படையில் 2 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தினார்கள் அப்படி இருக்கும் போது போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன் என்றும் போராட்டத்தில் ஈடுபடும் போலீசார் கோஷம் எழுப்பி வருகின்றனர்.டெல்லி போலீஸ் மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் இருக்கிறது எனவே இந்த போராட்டம் ஏன் நடைபெறுகிறது ? எப்படி போராட்டத்தை தடுப்பது ? என்று மத்திய உள்துறை அமைச்சகம் போலீஸ் மூத்த அதிகாரியிடம் பேசி வருகின்றது.அதே போல வழக்கறிஞ்சர்களும் பல்வேறு இடங்களில் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.