ஒத்த ஓட்டு வாங்கிய பாஜக நிர்வாகியை கலாய்த்து பிக்பாஸ் பிரபலம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கோவையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பாஜக நிர்வாகி கார்த்திக். இவர் ஒரே ஒரு ஓட்டு வாங்கி உள்ளார். இவர் குடும்பத்தில் ஐந்து உறுப்பினர்கள் இருந்தும் அவர்கள் வேறு வார்டை சேர்ந்தவர்களாவர். மேலும், தனது வீட்டிலேயே ஐந்து ஓட்டுகள் இருந்தும் அவரால் அந்த ஓட்டினை பெற முடியவில்லை.
இவருக்கு ஒரே ஒரு ஓட்டு கிடைத்த விஷயம் அறிந்த பலர் சமூக வலைதளப்பக்கத்தில் ‘ஒத்த ஓட்டு பாஜக’ என்ற ஹேஷ்ஸ்டேக்கை உருவாக்கி அதை வைரலாகி வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் பிரபலமான காஜல் பசுபதியும் ஒரு பதிவை வெளியிட்டு ‘ரொம்ப பெருமையா இருக்கி’ என்று பதிவிட்டுள்ளார்.
#ஒத்த_ஒட்டு_பாஜக#Single_Vote_BJP
Rhomba perumaiya iruki 😂😂😂 pic.twitter.com/W5MlPKhdk0— Kaajal Pasupathi (@kaajalActress) October 12, 2021