Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு விலக்கு மசோதா…. கவர்னரை சந்திக்க செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு  அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் எதிர்காலத்தை எண்ணி அச்சமடைந்து இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வால் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைப்பதில்லை. இதனால் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையின் போது நீட்தேர்வு விளக்கு பெரும் முயற்சிகளை மேற்கொள்வோம் என்று அறிக்கையில் அறிவித்திருந்தது.

அதன்படி பட்ஜெட் கூட்டத்தில், நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்ட மசோதாவை ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். அதன்பிறகு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இதுகுறித்து கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவு கவர்னர் ஒப்புதல் அளித்த பிறகு ஜனாதிபதியின் ஒப்புதல் அனுப்ப முடியும். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இன்று மாலை தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |