Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை…. எனக்கு சம்பளம் வேண்டாம்… தோனியின் முடிவால் புகழும் ரசிகர்கள்!!

டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட எம்எஸ் தோனி ஊதியம் கேட்கவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 17 ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.. டி20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் விராட் கோலி தலைமையில் அணியை அறிவித்தது.. இதில் இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ் தோனி நியமனம் செய்யப்பட்டார்.. இது ரசிகர்கள் மத்தியிலும், கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது..

தற்போது டோனி சென்னை அணிக்கு சிறப்பான பங்களிப்பை செய்து வருகின்றார். அந்த அணியின் கேப்டனாக இருந்து சிறப்பாக செயல்பட்டு வரும் தோனி தனது அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.. எப்படியும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் தோனி தலைமையிலான சென்னை அணி இருக்கிறது..

இந்தநிலையில் வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட எம்எஸ் தோனி எந்தவித ஊதியமும் கேட்கவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் தோனிக்கு நிறைய ரசிகர்கள் இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு அவருக்கு மேலும் புகழ் சேர்க்கிறது..

Categories

Tech |