பாலிவுட்டில் நட்புறவு இல்லை என நவாசுதீன் சித்திக் கூறியுள்ளார்.
நடிகர் நவாசுதீன் சித்திக் பாலிவுட் திரையுலகில் வித்தியாசமான கலைஞர் ஆவார். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘தலாஷ்’ படத்தில் அறிமுகமானார். 2013ல் வெளியான ‘லஞ்ச் பாக்ஸ்’ படத்திற்காக ஆசிய பசுபிக் திரைப்படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். இவர் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களிடையே தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், ஒரு இணையதளத்துக்கு நவாசுதீன் சித்திக் அளித்த பேட்டியில், ‘சீரியஸ் மேன்’ திரைப்படத்தை மிக சிறப்பாக இயக்கியுள்ளார் என சுதீர் சாபை பாராட்டியுள்ளார். மேலும், அவருடைய சிந்தனைகள் மிகவும் யதார்த்தமானது என்றும், அவர் சினிமாவை பற்றி அதிகமான அறிவை கொண்டிருக்கிறார் என்று பாராட்டியுள்ளார். இதனிடையே, பாலிவுட்டில் நட்புறவு இல்லை இனவெறி தான் அதிகமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். பாலிவுட்டில் உள்ள இன வெறியை எதிர்த்து நான் பல ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனது நடிப்பால் நான் இங்கே அங்கீகரிக்கப்பட்டுள்ளேன் எனவும் கூறியுள்ளார்.