கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை மோசமாக பேசாதீர்கள் அவரை விட்டுவிடுங்கள் என்று ஆர்சிபி கிரிக்கெட் வீரர் கிறிஸ்டியன் கெஞ்சி கேட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் நேற்று முன்தினம் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.. இதில் டாஸ் வென்ற கோலி தலைமையிலான பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்து 7 விக்கெட் இழந்து 138 ரன்கள் எடுத்தது.. அதிகபட்சமாக விராட் கோலி 39 ரன்களும் படிக்கல் 21 ரன்களும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் எடுத்தனர்..
பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 6 விக்கெட் இழந்து 139 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.. இதனால் கோலி கண்கலங்கி மனமுடைந்து போனார்.. அடுத்த ஐபிஎல் போட்டியில் இருந்து கேப்டனாக இல்லாமல் சாதாரண வீரராக ஆடுவார் என்பதால் இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கோலியின் கனவு பொய்த்து போனது.
இந்த போட்டியில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு சமமாக சென்று கொண்டிருந்த நிலையில், 12வது ஓவரை வீசிய டேன் கிறிஸ்டியன் ஓவரில் சுனில் நரைன் 3 சிக்சர்கள் அடித்தார். இதனால் ஆட்டம் அப்படியே கொல்கத்தா வசம் சென்றுவிட்டது. மொத்தம் 1.4 பந்துகளை வீசிய டேன் கிறிஸ்டியன் 29 ரன்களை கொடுத்துள்ளார்.. இதனால் ஆர்சிபி தோல்விக்கு இவர்தான் காரணம் என்று ரசிகர்கள் அவரை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி தீர்த்து வருகின்றனர்..
இதில் சில ரசிகர்கள் எல்லை மீறி அவரின் மனைவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், உன் கணவரெல்லாம் ஒரு கிரிக்கெட் வீரரா? அவரை கிரிக்கெட்டை விட்டு விலக சொல்லுங்கள் என்று கேட்டது மட்டுமில்லாமல் மிக மோசமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.. இது குறித்து கிறிஸ்டியன் கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை மோசமாக பேசாதீர்கள் அவரை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சி கேட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CTrbDAiJ5lr/?utm_source=ig_web_copy_link