கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்டி கட்டாயம் என்ற நடைமுறை 2018ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பேராசிரியர் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் சேரும் நபர்களின் தகுதியை உயர்த்தும் நோக்கில் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது. நடப்பாண்டில் ஜூலை மாதம் முதலே இந்த நடைமுறை அமல் படுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அமல்படுத்தப்படவில்லை.
தற்போது உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு பிஎச்டி படிப்பு கட்டாயம் என்னும் நடைமுறையில் பல மாற்றங்களை பல்கலைக்கழக மானியக்குழு கொண்டு வந்துள்ளது. அதன்படி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு வருகின்ற 2023-ம் ஆண்டு வரை பிஎச்டி கட்டாயமில்லை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்டி படிப்பு கட்டாயமில்லை.