Categories
உலக செய்திகள்

டிஜிட்டல் முறையில் நடைபெற்ற…. ஜி-20 நாடுகள் கூட்டம்…. தொடர்ந்து பணியாற்றும் ஐ.நா. சபை….!!

டிஜிட்டல் முறையில் ஜி-20 நாடுகளின் கூட்டத்தை இத்தாலி நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் சூழல் குறித்து ஜி- 20 நாடுகளின் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தை இத்தாலி டிஜிட்டல் முறையில் நடத்தியுள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டில் நிதி நிலைத்தன்மையை தக்க வைப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஆப்கானிஸ்தான் நாடானது பெரும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது நாட்டின் சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஐ. நா சபை தொடர்ந்து பெரும் பங்காற்றும்.

இதனை தொடர்ந்து ஐ.நா.சபையானது ஆப்கானில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.  அதிலும் ஆப்கானுக்கான  ஐ.நா சபை பணியாளர்கள் மற்றும் மனிதநேய அமைப்பாளர்களுக்கு முழுமையான, பாதுகாப்பான மற்றும் எந்தவொரு வேறுபாடின்றி சமஉரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்கானில் இருந்து வெளிநாடுகளுக்கு மக்கள் அகதிகளாக அதிகளவில் செல்வதை தடுக்கவும் பேரழிவு ஏற்படாமல் இருக்கவும் மனிதநேய அமைப்பாளர்களின் சேவை அங்கு அவசியம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |