Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எரிவாயு குழாய்களுக்கு எதிர்ப்பு…… நிறுவனத்தாறுடன் விவசாயிகள் வாக்குவாதம்….. மதுரையில் பரபரப்பு….!!

எண்ணுரில் இருந்து மதுரைக்கு எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டத்தை விவசாய நிலங்களில் செயல்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் வரும் எரிவாயு பைப்லைன் மூலம் 215 கிலோ மீட்டர் தூரம் மதுரைக்கு கொண்டு செல்லும் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்த தற்பொழுது பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகளிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாலூர் ஊராட்சியில் கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் ஒருபுறம் எண்ணைய் நிறுவனம் அழைப்பை ஏற்று விவசாயிகள் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Image result for எரிவாயு குழாய்

விவசாய நிலத்தை அழித்து அதற்குள் பைப்பை புதைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், அதற்கான மாற்று வழியை சிந்திக்குமாறும் சாலையோரத்தில் பைப் லைன் புதைக்க நடவடிக்கை எடுக்குமாறும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ஏர் உழுதல் உள்ளிட்ட பணிகளின்போது ஏதாவது அசம்பாவிதம் நிகழ வாய்ப்பு இருப்பதாகவும் இத்திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

Categories

Tech |