Categories
அரசியல்

புரிதல் இல்லை…. ஒண்ணுமே தெரியல… திருமா தப்பிக்க வேண்டும்… அண்ணாமலை தருமாறு விமர்சனம் …!!

2024ல் பாஜக 400எம்.பிக்கு மேல வைத்து ஆட்சி அமைக்கப் போவது உறுதி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

2024இல் மீண்டும் மோடி ஆட்சி வந்தால் தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என திருமாவளவன் கூறியது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 2024ல் ரெண்டு விஷயம். காங்கிரஸ் கட்சி இருக்காது. காங்கிரஸ் என்ற கட்சி இருந்தால் தானே திருமாவளவன் கூட்டணி வைப்பார், காங்கிரஸ் இருக்காது. அதனால் திருமாவளவனுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதனால் அவர் இப்ப தப்பிக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் என்ற கப்பலில் இருந்து வெளியே குதிக்க வேண்டும். அந்த கப்பல் அது பாட்டுக்கு போய் மூழ்கிவிடும்.

திருமாவளவன் அவர்கள் முதலில் ஜி.எஸ்.டியை உருப்படியாக படித்துவிட்டு வந்து பேசட்டும். ஜி.எஸ்.டி என்றால் என்ன ? மத்திய அரசு மாநில அரசு என்றால் என்ன ? என்பதை கொஞ்சம் பார்த்துட்டு வரட்டும். அதே போல நீட்டை  பற்றி கொஞ்சம் பார்த்துட்டு வந்து டயலாக் எல்லாம் விடட்டும். ஜி.எஸ்.டியில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. எதிலுமே புரிதல் இல்லாமல் பேசுகிறார். திருமாவளவன் அவர்கள் புரிதல் இல்லாமல் பேசுகிறார்.

2024ல் பாஜக 400எம்.பிக்கு மேல வைத்து ஆட்சி அமைக்கப் போவது உறுதி. திருமாவளவன்  வந்தாலும் சரி, அவரை மாதிரி நூறு வளவன் அவர்கள் வந்தல்லும், சரி தமிழகத்திலும் பாஜக பெரும்பான்மை இடத்தில் எம்.பிக்கள் வெற்றிபெற போவது உறுதி. ஆனால் அவர் தனியாக தப்பிக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே வர வேண்டும். காங்கிரஸ் என்பது மூழ்கி போற கப்பல், அது மூழ்கி போச்சு. ராகுல் காந்தியை விட்டு எல்லாரும் விலகியாச்சு, தனியாக தான் அரசியல் பண்ணிட்டு இருக்காங்க, பார்ப்போம் என தெரிவித்தார்.

Categories

Tech |