Categories
மாநில செய்திகள்

சுகாதார பணியாளர்களுக்கு நிவாரணம்…. தமிழக அரசு அதிரடி….!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் கடுமையாக பரவி வந்த நிலையில் பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் நடுத்தர மக்களுக்கு பொருளாதாரத்தில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு உலகம் முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலையில் கொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரிக்க தொடங்கியது. அப்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையின் காரணமாக நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்து வந்தது. அதில் மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில்  கொரோனா காலத்தில் சுகாதாரத்துறையில் உயிரிழந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு விரைவில் அவர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும். அதனைப்போலவே முன் களப்பணியாளர்கள் கொரோனா காலத்தில் இறந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு நிவாரணம் நிதி வழங்குவதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |