செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஹெச். ராஜா மத்திய அரசின் பிரதிநிதி அல்ல. அதோடு மட்டும் அல்லாமல் அவர் ஒரு அரசாங்கம் அல்ல. பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகும் பல்வேறு வகையிலும் இந்து சமய அறநிலைத்துறை மீது அவர் தூற்றுவதும், பேசுவதுமாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்த ஏச்சுக்களையும், பேச்சுகளையும் இந்து சமய அறநிலைத்துறை கவனத்தில் கொள்வதில்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இந்து சமய அறநிலைத்துறை எப்படி இருந்தது? தற்போது எப்படி இருக்கிறது? என்று மக்களுக்கு தெரியும். பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர் எது செய்தாலும் அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை என்று கூறியுள்ளார்.