Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை :இந்திய அணியின் புதிய ஜெர்ஸி ….! வெளியான முக்கிய தகவல் ….!!!

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை, பிசிசிஐ  நாளை அறிமுகம் செய்கிறது .

டி20 உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற இருந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் மாற்றப்பட்டுள்ளது .இதனிடையே வருகின்ற 17-ஆம் தேதி முதல் டி20 உலகக்கோப்பை போட்டி தொடங்குகிறது. இப்போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இதனிடையே இத்தொடரில்  இந்திய அணி  புதிய ஜெர்ஸியில் விளையாடு உள்ளது .எனவே இந்த புதிய ஜெர்சியை பிசிசிஐ நாளை அறிமுகம் செய்கிறது.

இதில் வருகின்ற 24-ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி ,பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது .டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது .அதோடு வருகின்ற 18-ஆம் தேதி இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது .இதனிடையே இலங்கை, ஸ்காட்லாந்து ,அயர்லாந்து மற்றும்  நமீபியாஆகிய அணிகள் டி20 உலகக்கோப்பை  ஜெர்ஸியை  அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |