Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தொந்தரவு கொடுத்த அதிகாரி…. தீக்குளிக்க முயன்ற இளம்பெண்….. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குறுக்குசாலை பெரிய நத்தம் பகுதியில் ராமலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டப்பிடாரத்தில் உள்ள யூனியன் அலுவலகத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரி ஒருவர் ராமலட்சுமிக்கு பல்வேறு தொந்தரவுகள் கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து ராமலட்சுமி மற்றும் அவரது குழந்தைகளை கொலை செய்து விடுவதாக மிரட்டி பஞ்சாயத்து கணக்கில் உள்ள பணத்தை அதிகாரி அவரது வங்கி கணக்கில் மாற்றியுள்ளார்.

மேலும் ராமலட்சுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த ராமலட்சுமி சம்பந்தப்பட்ட அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து ராமலட்சுமியை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |