செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அனல் மின் நிலையங்கள் மூலமாக கடந்த அதிமுக ஆட்சியில் 58% மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்திடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்காகவே அனல் மின் நிலையங்கள் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்தது. அனல் மின் நிலையங்கள் மூலமாக 4,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் இருந்தும் கடந்த ஆட்சியில் 1800 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தற்போது மின் உற்பத்தி 3500 மெகாவாட் ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக தமிழகத்தில் 70 சதவீத மின் உற்பத்தி செய்யப்படும் கடந்த 2006 -2011ஆம் வருடம் திமுக ஆட்சியில் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி 85 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது என்று கூறியுள்ளார்.