Categories
மாநில செய்திகள்

அடி தூள்… உள்ளாட்சி தேர்தலில் 51 பேர் வெற்றி… வெறித்தனம் காட்டிய விஜய் மக்கள் இயக்கம்!!

விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் வெற்றி என விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்..

காஞ்சிபுரம் கருப்படிதட்டை காந்திநகர் வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நகர செயலர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார்.. மொத்தம் 65 வாக்குகள் பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.. மேலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் 50 பேர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.. வாக்கு எண்ணிக்கை தொடர்வதால் மேலும் பல இடங்களில் வெற்றி பெறுவோம் என்று விஜய் மக்கள் இயக்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது..

 

Categories

Tech |