தாயை இழந்து தவித்த தன் காதலனுக்காக அவருடைய தந்தையை திருமணம் செய்து தாயாகவே மாறியுள்ளார் ஒரு காதலி.
ஆண்கள் தங்களுக்கு வரும் மனைவி தாயை போல் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அதற்காக தாயாகவே மாறி விட்டால் என்னவாகும்? அவ்வாறு தன்னுடைய காதலி, தாயாகவே மாறிய ஒரு காதலனை பற்றிய தொகுப்பு தான் இது. இந்த வீடியோவானது டிக்டாக் தளத்தில் @ys.amri என்ற பயனர் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவரது தாயார் திடீரென இறந்து விட்டதால், அவருடைய காதலன் தாய் பாசத்தை இழந்து தவிப்பதால் வருங்கால மாமனார், அதாவது காதலனின் தந்தையையே திருமணம் செய்து காதலனுக்கு தாயாகவே மாறியுள்ளார் அந்த காதலி. இதுகுறித்து டிக்டாக் தளத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.