இலங்கைக்கு கடத்த முயன்ற 2,400 மஞ்சளை காவல்துறையினர் பறிமுதல் செய்த காவல்துறையினர் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராணி தலைமையில் காவல்துறையினர் அச்சுந்தன்வயல் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்ற போது அந்த வாகனம் சோதனை சாவடியில் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த வாகனத்தை மடக்கி பிடிப்பதற்கு பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் வருவதைக் கண்ட சரக்கு வாகன டிரைவர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து சரக்கு வாகனத்தில் இருந்த மாற்றி 2 பேரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சபரிநாதன், வெங்கடேசன் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் சுமார் 2400 கிலோ மஞ்சள் மூட்டைகள் இருந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தியுள்ளார்.
அந்த விசாரணையில் ராமநாதபுரம் மேலக்கோட்டை பகுதியில் வசிக்கும் அன்வர் என்பவருக்கு இந்த மஞ்சளைக் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர் மொத்தமாக மஞ்சளை வாங்கி அதை இலங்கைக்கு கடத்த திட்டம் தீட்டியிருப்பதாக கூறியுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அன்வர் மீது வழக்குபதிவு செய்து ஆரை தேடி வருகின்றனர். இதனையடுத்து சரக்கு வாகனத்தையும், 2,400 கிலோ மஞ்சளையும் பறிமுதல் செய்துள்ளனர்.