Categories
உலக செய்திகள்

அதிபருக்கே அனுமதி இல்லை…. தடுப்பூசி சான்றிதழ் ஏன்….? பிரேசில் அதிபரின் பேட்டி….!!

கொரோனா தடுப்பூசி போடாததால் கால்பந்தாட்ட மைதானத்தில் அதிபருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றானது மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஆனால் பிரேசில் நாட்டின் அதிபர் Jair Bolsanaro கொரோனா வைரஸ் தொற்று காய்ச்சல் போன்று என்று கூறுகிறார். மேலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்துவது, தனிமைப்படுத்துதல் மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அதிபர் Jair Bolsanaro மறுத்துள்ளார்.

தற்போது அதிபர் Jair Balsanaro தனது குடும்பத்தினருடன் Sao Paulo நகரில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். இதனை தொடர்ந்து பிரேசிலில் நடைபெறும் உள்நாட்டு அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை பார்க்க அங்குள்ள மைதானத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் அதிபர் Jair Bolsanaro கொரோனா தடுப்பூசி போடவில்லை என்று கூறி மைதானத்துக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் அதிபர் Jair Bolsanaro அங்கிருந்து கோபத்துடன் புறப்பட்டு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து பிரேசில் நாட்டு அதிபர் Jair Bolsanaro பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, “தடுப்பூசி சான்றிதழ் எதற்கு. நான் கால்பந்து விளையாட்டை பார்க்க தான் விரும்புகிறேன். அதற்கு தடுப்பூசி போட வேண்டும் என்று அதிகாரிகள் சொல்வது ஏன்..? தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை விட எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே உள்ளது” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |