தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்தமான் அருகே அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற 15ஆம் தேதி ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையின் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை நீடிக்கும்.