Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. உங்களை வழிமறித்து யாராவது இப்படி சொன்னா நம்பாதீங்க…. காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை….!!!!

பொதுமக்களை வழிமறித்து சில மோசடி கும்பல் பண மோசடியில் ஈடுபடுவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை செம்பரம்பாக்கத்தில் ராஜேஸ்வரி என்பவர் வசித்துவருகிறார். அவர் நேற்று முன்தினம் முக கவசம் அணியாமல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இருவர், ராஜேஸ்வரி இடம் சென்று ஏன் முக கவசம் அணிய வில்லை என்று கேட்டனர். அதன்பிறகு அவரை தனியாக அழைத்துச் சென்று, முக கவசம் அணியாவிட்டால் போலீசார் அபராதம் விதிப்பார்கள் என்று கூறி தங்க நகைகளை கழற்றி பையில் பத்திரமாக வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

அதனை நம்பிய ராஜேஸ்வரி, தங்க நகைகளை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். அவற்றை வாங்கிய நபர்கள் தங்க நகைகளை கைக்குள் வைப்பது போல் ஏமாற்றி, ராஜேஸ்வரியின் கவனத்தை திசைதிருப்பி 12 பவுன் நகையை திருடிச் சென்றனர். இது சிறிது நேரத்திற்குப் பிறகே ராஜேஸ்வரிக்கு தெரியவந்தது. அதன் பிறகு உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், முக கவசம் அணியாமல் மக்கள் செல்லும் போது, மக்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை கழற்றி பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று போலீசார் யாரும் கூறுவதில்லை. குறிப்பிட்ட இடத்தில் கலவரம் நடைபெறுகிறது. எனவே அணிந்திருக்கும் நகைகளை பத்திரமாக பையில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியும் ரூபாய் நோட்டுக்கள் மற்றும்சில்லறைகளை கீழே போட்டு கவனத்தை திசை திருப்புவது போன்ற வழிகளில் பணம் மற்றும் நகைகளை ஏமாற்றிப் பறிக்கவும் மர்ம கும்பலிடம் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

உங்களுக்கு சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனே காவலன் செயலி அல்லது 100, 112 என்ற அவசர அழைப்பு எண் மூலமாக காவல் துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |