Categories
உலக செய்திகள்

தம்பதியினர் சுட்டுக்கொலை… கதறி அழுத குழந்தை…. சடலத்தை மீட்ட போலீசார்….!!

பிரேசிலில் இளம்வயதுடைய தம்பதியினர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலில் உள்ள Mato Grosso மாநிலத்தில் உள்ள Alto Garcas நகரில் உள்ள ஒரு தம்பதியினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அங்கிருந்த உள்ளூர் ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ” Nicolas Elias Albuquerque do Prado அவரது மனைவி Cleidiana Pereira Alixandre ஆகிய இருவரும் கடந்த 8 ஆம் தேதி அன்று தங்களது பத்துமாதக் குழந்தையுடன் Alto Araguaiaவில் இருந்து அவர்கள் தங்கியுள்ள Ato Garcas நகருக்கு வாடகை கார் ஒன்றில் சென்றுள்ளனர்.

அவர்கள் இருவரும் தங்களது வீடு வந்தவுடன் காரை விட்டு இறங்கியுள்ளனர். அப்பொழுது தீடிரென  இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். மேலும் பத்து மாத குழந்தை தனது பெற்றோர் இறந்தது தெரியாமல் கதறி அழுதுக் கொண்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்கள் இருவரின் சடலத்தையும் மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறிப்பாக  குழந்தையை அங்கிருந்து மீட்டுள்ளனர். இந்த  துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அவர்கள் இருவரையும் அழைத்து வந்த கார் ஓட்டுநரிடம் போலீசார் விசாரித்துள்ளனர். ‘அவர் எனக்கு சரியாக தெரியவில்லை’ என்று கூறியுள்ளார். அதிலும் கொலை செய்யப்பட்ட தம்பதியினருக்கு  போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் Nicolas மீது போதை பொருள் கடத்தல் மற்றும் இரண்டு கொள்ளை வழக்குகள் உள்ளன.

அவர் மனைவியான Cleidianaவும் ஒரு முறை திருடப்பட்ட குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவேளை அந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தான் இவர்களை தாக்கியிருக்ககூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு குழந்தை பாதுகாப்பு சேவை மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Categories

Tech |